Author Topic: ~ தக்காளி சாஸ் ~  (Read 322 times)

Online MysteRy

~ தக்காளி சாஸ் ~
« on: March 05, 2016, 05:56:33 PM »
தக்காளி சாஸ்



தக்காளி – அரை கிலோ
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 5 பல்
மிளகாய் வற்றல் – 5
சீனி – அரை கிலோ
பட்டை – 3
கிராம்பு – 12
ஏலக்காய் – 4

இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சுத்தமான சிறிய துணியில் ஏலக்காய், கிராம்பு, பட்டை மூன்றையும் சேர்த்து சிறிய மூட்டையாக கட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் ஊற்றி அதில் கட்டி வைத்திருக்கும் மூட்டையை போடவும்.
பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
தக்காளி வெந்து மேலே உள்ள தோல் சுருங்கியதும் இறக்கி வைத்து விடவும்.
பிறகு தக்காளியை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு அரைக்கவும்.
நன்கு மாவாக அரைத்து எடுத்து, அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வடிகட்டிய விழுதை ஊற்றி வேகவிடவும். அவ்வபோது கிளறவும்.
அதில் சீனியை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுமார் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது தக்காளி சாஸ் தயார். தக்காளி கெட்சப் வேண்டுமென்றால், தக்காளியுடன் கால் கிலோ வெங்காயத்தையும் சேர்த்து வேகவைத்து அரைக்கவேண்டும். அரைக்கும்போது ஒரு மேசைக்கரண்டி மிளகு, ஒரு குடைமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இந்த சுவையான தக்காளி சாஸ்ஸை செய்து காட்டியவர் திரு. சண்முகம் அவர்கள். நாகை சத்யம் கேட்டரிங் கல்லூரியில் பணியாற்றும் இவர், செட்டிநாடு, தந்தூரி, அரேபியன் உணவுகள் தயாரிப்பதில் திறன் வாய்ந்தவர். அரேபியன் உணவுகள் தயாரிப்பில் தனியாக டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.