Author Topic: ~ நண்டு மசாலா ~  (Read 385 times)

Online MysteRy

~ நண்டு மசாலா ~
« on: March 05, 2016, 10:19:39 AM »
நண்டு மசாலா



கடல் நண்டு – ஒரு கிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
உருளைக்கிழங்கு – கால் கிலோ
இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி
தேங்க்காய் – அரைகோப்பை
மிளகாய்த் தூள் – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – மூன்று தேக்கரண்டி
எண்ணெய் – அரைக் கோப்பை
கொத்தமல்லி – ஒரு கட்டு

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நண்டை வெட்டி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்ப்பூவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பைப் போட்டு பொரிய விடவும்.
பிறகு நறுக்கின வெங்காயத்தை அதில் கொட்டி வறுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
பச்சை வாடை போனவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு எடுத்து வைத்துல்ல அனைத்து தூள்களையும் அதில் சேர்த்து, நறுக்கின கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை ஒரு கோப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
அத்துடன் நண்டு துண்டங்களையும், உருளைகிழங்குத் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தொடர்ந்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி, உப்பு போட்டு பிரட்டிவிட்டு வேகவிடவும்.
நண்டு வெந்த வாசனை வந்தவுடன் சிறிது கிளறி விட்டு இறக்கி விடவும்.
இப்போது சுவையான நண்டு மசாலா தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.