Author Topic: ~ இஞ்சி சட்னி ~  (Read 290 times)

Offline MysteRy

~ இஞ்சி சட்னி ~
« on: March 02, 2016, 08:25:19 PM »
இஞ்சி சட்னி



இஞ்சி – 4
தேங்காய் – ஒரு மூடி
பச்சைமிளகாய் – 4
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் – ஒரு நெல்லிக்காய் அளவு
கடுகு – அரைத் தேக்கரண்டி
மஞ்சள்பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – ஒன்றரைத் தேக்கரண்டி

தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
புளி விதைகளை நீக்கி புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்பொடி, வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து, திட்டமாக தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
சிறிது கொதித்தவுடனே இறக்கிவிடவும்.