Author Topic: ~ முளைகட்டியப் பயறு சுண்டல் ~  (Read 347 times)

Offline MysteRy

முளைகட்டியப் பயறு சுண்டல்



பாசிப் பயறு – 1 1/2 கப்
தேங்காய் பூ – கால் கப்
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெள்ள உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி

முதல் நாள் இரவே பாசிப் பயறை ஊற வைத்து விடவும். மறுநாள் காலையில் எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு துணியில் போட்டு மூட்டை போல் கட்டி விடவும்.
மாலையில் பயறு முளைவிட்டு வந்திருக்கும். அதனை எடுத்து குக்கரில் போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல், உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
பின்னர் அதில் துருவின தேங்காய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
அத்துடன் வேகவைத்து எடுத்துள்ள பயற்றை சேர்த்து கிளறிவிட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
எளிமையாய் தயாரிக்கக்கூடிய சத்தான சுண்டல் இப்போது தயார்.