Author Topic: ~ பச்சை அரிசி இட்டலி ~  (Read 306 times)

Offline MysteRy

~ பச்சை அரிசி இட்டலி ~
« on: February 29, 2016, 09:38:21 PM »
பச்சை அரிசி இட்டலி



தேவையான பொருட்கள்:

½ சுண்டு உழுத்தம்பருப்பு
½ தேக்கரண்டி வெந்தயம்
1 சுண்டு பச்சையரி, சிறிய வெள்ளை ரகம்
கொதிக்கும் நீர்
1 தேக்கரண்டி உப்புத்தூள்
பச்சை அரிசி இட்டலி

செய்முறை:

உழுத்தம்பருப்பை வெந்தயத்துடன் 6-8 மணிநேரம் ஊறவிட்டு, செய்முறை 15 இல் பொடுத்துள்ளபடி, நைஸாகப் பொங்கப்பொங்க இரைத்து, வழிக்கவும், பச்சை அரிசியைக் கழுவி, ஒட்ட வடித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, கொதிக்கும் நீரை நிறையவிட்டு, மூடிவிடவும். ஆறிய பின்னர், அரிவியை வடித்து,

இறுக்கமாகவும், பொடிரவையின் அளவுக்கு இலேசான கரகரப்பாகவும் அரைத்து, அரைத்து வைத்த உழுந்தில் போட்டு, உப்பையும் போட்டு, தடித்த வார்பதமாக கலந்து கொள்ள. இதனையும் 5 நிமிடங்களாவது நன்றாக அடித்துக் கரைத்து வெக்கையுள்ள இடத்தில் (செ.மு 4 ஐப் பார்க்க) மூடிவைத்து, 12-14 மணி நேரம் புளிக்கவிடவும், பிறகு செய்முறை 16 என்பதில் கொடுத்துள்ளபடி இட்டலியை அவித்தெடுக்கவும்.