Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மலச்சிக்கலுக்கு கொன்றை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மலச்சிக்கலுக்கு கொன்றை ~ (Read 395 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226753
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மலச்சிக்கலுக்கு கொன்றை ~
«
on:
February 28, 2016, 10:18:35 PM »
மலச்சிக்கலுக்கு கொன்றை
வேறுபெயர்கள் : பெருங்கொன்றை, சிறுகொன்றை
ஆங்கிலப் பெயர் : CASSIA FISTULA
தாவரக்குடும்பம் : CAESALPINIACEAE
காய்ச்சல் தணிக்கும். மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும். வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும்.
நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும்.
ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும். பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப்பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும். பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.
கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்தமான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.
கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால், காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.
இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மலச்சிக்கலுக்கு கொன்றை ~