Author Topic: ~ காஷ்மீர் சிக்கன் மசாலா ~  (Read 399 times)

Online MysteRy

காஷ்மீர் சிக்கன் மசாலா



சிக்கன் – 500 கிராம்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
வெங்காயம் – 2
கொத்தமல்லி இலைகள்
மசாலாவுக்கு
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தயிர்- 1 கப்
உப்பு
அரைக்க
வறண்ட காஷ்மீரி வத்தல் – 10 முதல் 15
பூண்டு – 6
கிராம்பு 8

சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, சீரகப்பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிக்கனுடன் நன்றாக கிளறவும். பூண்டு, காஷ்மீரி வத்தல் சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி சில நிமிடங்கள் வதக்கியதும் மூடி வைத்து வேகவிடவும். சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள் மசாலாவை வேகவிட்டு அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து மூடி வைத்து சிறிது நேரம் வேகவைக்கவும். வெந்ததும் எண்ணெய் தனியாக பிரிந்து இருக்கும் பின்னர் உப்பு சரியாக இருக்கிறதா என பார்த்துவிட்டு கொத்தமல்லி தூளை தூவி பரிமாறவும்