Author Topic: கோடுகள் இல்லாத கோலங்கள்  (Read 904 times)

Offline thamilan

சாக்கடையில் வசித்தாலும்
சந்தனமாய் மணக்கிறோம்
சாதாரணமாக நினைத்தாலும்
சாகசங்கள் செய்கிறோம்
சந்தனமாய் மணந்தென்ன
சாகசங்கள் புரிந்தென்ன
வறுமைக் கோடு வகுத்தவன் யாரடா
 கோடே இல்லாத வெறும்
புள்ளிகள் நாங்களடா   

கண்ணில் பொங்கும் நீரது ஒன்றே
நாம் கொண்டாடிடும் பொங்கலடா
ஆசைகளை குவித்துவைத்து கொளுத்துவதே
நாம் கொண்டாடும் போகியடா

பசுமையே காணாத பயிரானோம்
பாதை இல்லாத ஊரானோம்
விளக்கில்லா வீட்டின் இருளானோம்
வறுமையின் விதைகல்லானோம்
பள்ளத்தின் படிகலானோம்

போதும் இந்த வாழ்க்கை
வறுமையின் விதைகள்
வெடிகுண்டுகள் ஆகட்டும்
பள்ளத்தின் படிக்கட்டுக்கள்
ஏணிப்படிகள் ஆகட்டும்
கண்ணீர்த் துளிகள்
நெருப்புப் பொறிகள் ஆகட்டும்

சூரியன் எழாமல் உதயமாவதில்லை
சுருங்கி இருந்தால் சோகம் தீர்வதில்லை
கரையை மோதிச் செல்லாமல்
கடல் அலைகள் கூட ஓய்வதில்லை

ஏர் முனையில் சாசனம் எழுதிடுவோம்
உழைப்பவர் மட்டும் வாழும் உலகை
மீண்டும் நாமே படைத்திடுவோம்
உறிஞ்சும் வர்க்கம் இல்லாமல் - அதை
நாமே பாதுகாத்திடுவோம்


Offline Maran

Re: கோடுகள் இல்லாத கோலங்கள்
« Reply #1 on: February 28, 2016, 04:11:11 PM »


மிக அழகான கவிதை நண்பா... அழகான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வறுமையினை விரட்ட கோடுகளே இல்லாத கோலங்களை வரைந்து தன்னம்பிக்கை கவிதை பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். 


செழிப்பாக
இருக்கிறது
ஏழையின்
வீட்டில்
வறுமை..!

பள்ளியில் ஆசிரியர்
கற்றுத் தராத பாடம்
வீட்டில்அம்மா
கற்றுத் தராத பாடம்
தொழிலில் அப்பா
கற்றுத் தராத பாடம்
வறுமை கற்றுத்தருகிறது !…



வறுமை ஒரு நோய். நோய்க்கு மருந்தெடுத்து மாற்றுகிறோமோ அதுபோல் வறுமையையும் மாற்றலாம் வறுமையோடு வாழ்பவன் நோயோடு இறந்து விடக்கூடாது என்கிறேன். பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் உழைப்பைக் கண்டால் ஓடி விடும் - பாரதியார்