Author Topic: ~ தூத்துக்குடி தக்காளி ஜாம் ~  (Read 411 times)

Offline MysteRy

தூத்துக்குடி தக்காளி ஜாம்



தேவையானவை :

தக்காளி - அரைக் கிலோ
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 25 கிராம்
திராட்சை(கிஸ்மிஸ்) - 50 கிராம்
நெய் - 25 கிராம்
பேரிச்சை - 100 கிராம்

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி உருகியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.தக்காளியும்,சர்க்கரையும் ஒன்றாகி ஜாம் பததிற்கு வந்ததும் ,பேரிட்சை , திராட்சை(கிஸ்மிஸ்) சேர்த்து நன்கு கிளறவும். பேரிச்சம்பழம் தக்காளி ஜாமில் கலந்து ஜாம் கெட்டிப் பதம் வந்ததும் நெய்யில் வதக்கிய முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும்.
« Last Edit: February 27, 2016, 12:42:23 AM by MysteRy »