Author Topic: ~ கடலை சட்னி ~  (Read 424 times)

Offline MysteRy

~ கடலை சட்னி ~
« on: February 26, 2016, 10:56:11 PM »
கடலை சட்னி



தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை –100 கிராம்
கொத்தமல்லிதழை – 3 கைப்பிடி அளவு
பச்சைமிளகாய் – 2
புளி – சுண்டைக்காய் அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், புளி, பச்சைமிளகாய் போன்றவைகளை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
* அவை சற்று ஆறிய பின்பு, வேர்க்கடலையை தோல் நீக்கி அதில் உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரையுங்கள்.
* இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.