Author Topic: ~ எலுமிச்சை இடியாப்பம் ~  (Read 705 times)

Offline MysteRy

~ எலுமிச்சை இடியாப்பம் ~
« on: February 26, 2016, 08:48:40 PM »
எலுமிச்சை இடியாப்பம்



தேவையான பொருட்கள் :

சேமியா/இடியாப்பம் – 1 1/2 கப் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வேர்க்கடலை – 1/2 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் – 1 கெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

முதலில் சேமியா/இடியாப்பத்தை செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி இறக்கினால், எலுமிச்சை இடியாப்பம் ரெடி!!!
« Last Edit: February 26, 2016, 09:14:12 PM by MysteRy »