Author Topic: ~ மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் வித் ஜூஸ் ~  (Read 359 times)

Offline MysteRy

மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் வித் ஜூஸ்



தேவையான பொருட்கள்

ஆரஞ்சு ஜூஸ் – 20 மி.லி,
எலுமிச்சம்பழ ஜூஸ் – 20 மி.லி,
தேன் – 3 ஸ்பூன்,
ஆரஞ்சு, புதினா – தலா 5 கிராம்,
நறுக்கிய அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழத் துண்டுகள் – தலா 100 கிராம்,
கறுப்பு திராட்சை – 50 கிராம்.

செய்முறை:

• ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ், சர்க்கரை, புதினா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும்.
• இந்த ஜூஸ் கலவையில், அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும்.
• கடைசியாக, திராட்சையையும் சேர்த்துக் கிளறினால், மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் வித் ஜூஸ் தயார்.

பலன்கள்:

வைட்டமின் ஏ, சி, இ, ஐசோபீன், ஃப்ளேவனாய்டு, கால்சியம், நார்ச்சத்து போன்ற, உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. உடலின் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை தவிர்க்கவும். அன்னாசிப்பழம் ஜீரணசக்தியைத் தரும்.
தர்பூசணி, உடலின் நீர்ச்சத்து வற்றிப்போகாமல் காக்கும். பப்பாளி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையைப் போக்கும். ஜீரணக் கோளாறு வராமல் தடுக்க, கண் பார்வை தெளிவடைய, நெஞ்சு எரிச்சல் குணமாக, உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, உடல் எடை குறைய, தோல் மினுமினுப்பு அடைய, மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் வித் ஜூஸ் ஏற்றது.