Author Topic: ~ மிளகு மீன் மசாலா ~  (Read 317 times)

Offline MysteRy

~ மிளகு மீன் மசாலா ~
« on: February 25, 2016, 09:57:38 PM »
மிளகு மீன் மசாலா



தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் - 500 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி விழுது - 1 ஸ்பூன்

பூண்டு விழுது - 1 ஸ்பூன்

ப.மிளகாய் - 4

சீரகம் - 1 ஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

மிளகு தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

தயிர் - 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

கொத்தமல்லி தழை - 1 கட்டு

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை :

* தக்காளி,, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி மென்மையாக வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் ப.மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள்சேர்த்து சிறிது வதக்கிய பின் தயிர், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிய பின் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மீன் துண்டுகளை போடவும்.

* 5 முதல் 7 நிமிடங்களில் மீன் வெந்துவிடும்.

* கடைசியாக கொத்தமல்லிதழை, எலுமிச்சைசாறு ஊற்றி இறக்கவும்.

* சுவையான மிளகு மீன் மசாலா ரெடி.