Author Topic: ~ நீர் தோசை ~  (Read 376 times)

Online MysteRy

~ நீர் தோசை ~
« on: February 23, 2016, 10:22:29 PM »
நீர் தோசை



தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப் (இரவில் ஊற வைத்தது) தேங்காய் – 1 கப் (துருவியது) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு கழுவ வேண்டும். பின்னர் கிரைண்டரில் அரிசியைப் போட்டு, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு அதனை ஒரு மணிநேரம் தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றம் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் தேய்த்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடேறியதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென்று வந்ததும், பரிமாறலாம். இந்த நீர் தோசையை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். குறிப்பு: இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படியெனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை.