Author Topic: காட்டுப் பூக்கள்  (Read 524 times)

Offline SweeTie

காட்டுப் பூக்கள்
« on: February 23, 2016, 08:41:40 AM »


காட்டுப் பூவே உன்னை
களைந்தெறிய மனமில்லை
அலங்காரம் இல்லாமல்
அழகோடு இருக்கின்றாய் 
காதலன் வருகைக்கு
காத்திருக்கும்  மங்கையைப் போல்


இளவேனிற்  காலமதில்
இளம்பெண்கள்  போலவே 
கண்ணுக்கு இதமாக
பூத்துக்  குலுங்கும்  உன்னை 
பறிப்பாரும் இல்லை
வரவேற்பாரும் இல்லை.

தாகத்தில் வாடி
சோகத்தில் வதங்காமல்
காதலன்  மழையரசன்
வருகைக்கு காத்திருந்து
சில்மிசங்கள் புரிந்து
சீண்டி விளையாடுகிறாய் .

காட்டுப் பூவே என்
புரியாத காதலும்
உன்னைப் போன்றதே
இதனாலோ என்னவோ
மலரும் மங்கையும்
ஒன்றென்று  கூறிவைத்தார்.


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காட்டுப் பூக்கள்
« Reply #1 on: February 23, 2016, 12:33:26 PM »
பளீச்சிடுகின்றது இனியா உன் பார்வை !!

Offline SweeTie

Re: காட்டுப் பூக்கள்
« Reply #2 on: February 25, 2016, 07:57:29 PM »
என் கவிதைமேல் விழுந்த உங்கள் பளிச் என்ற பார்வைக்கு
மிக மிக நன்றி.