Author Topic: ~ பலாக்காய் கூட்டு ~  (Read 429 times)

Offline MysteRy

~ பலாக்காய் கூட்டு ~
« on: February 22, 2016, 09:55:36 PM »
பலாக்காய் கூட்டு



தேவையான பொருட்கள் :

பிஞ்சு பலாக்காய் சிறு துண்டுகளாக்கியது -250 கிராம்
துவரம் பருப்பு-100 கிராம்
நறுக்கிய வெங்காயம்-1
நறுக்கிய தக்காளி-1
மல்லித்தூள்-1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய்- சமைக்க.

செய்முறை :

பலாக்காயையும், துவரம் பருப்பையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் வைத்து வேக விடவும்.குக்கரைத் திறந்தபின், தக்காளி, வெங்காயம், மஞ்சள் தூள். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மற்றும் உப்பை சேர்க்கவும்.
மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு , தண்ணீர் சுண்டியதும் இறக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுத்தம் பருப்பையும் கடுகையும் போட்டு தாளிக்கவும். கடுகு பொறிந்ததும், கறிவேப்பிலை சேர்க்கவும்.
அதில் வெந்த பலாக்காய் கலவையை கொட்டிக் கலக்கவும். லேசான தீயில் 10 நிமிடம் வேக விட்டு, சூடாக பறிமாறவும்.