Author Topic: ~ 30 வகை டயட் சமையல்! வெரைட்டியா சாப்பிடலாம்.. வெயிட்டையும் குறைக்கலாம்… ~  (Read 998 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


இருக்கும். சௌசௌதர்பூசணி தோல் துவையல்தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை -ஒரு கப், சின்னவெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒருடேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு -தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக்கொள்ளவும். கடாயில்எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித்தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சைவாசனைபோகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.அதேகடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி,கலந்துபரிமாறவும். குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமானவிட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி,எறிந்துவிடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறுதுவையல்செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


தோல்துவையலின்சுவையும் வித்தியாசமாக இருக்கும். உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டுதேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ,கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு,உளுத்தம்பருப்பு – தலா கால்டீஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் -ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம்சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக்கொள்ளவும்.கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேகவைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்குவதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அதுநன்கு கரையும் வரை வதக்கவும்.மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துநன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம்வந்ததும், வேக வைத்தவற்றைச்சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5நிமிடங்கள் கொதிக்க வைத்துஇறக்கவும். குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ளலாம். காலை,

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


மதியநேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது. மக்காச்சோளரொட்டி தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக்கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட்கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு- தேவையான அளவு. செய்முறை: சோள மாவு, மைதா மாவைஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர்சேர்த்து, சப்பாத்தி மாவுபதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊறவைக்கத்தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறுஉருண்டைகளாகஉருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய்விட்டுசுட்டு எடுக்கவும். குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது.ஆனால், உடல் எடைகுறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான்,கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம்விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்துசாப்பிடும்போது மக்காச்சோளத்தின்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். வீட்எனர்ஷி டிரிங்க்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு -தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு,பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு -தேவையான அளவு. செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பைஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்புசேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும்இறக்கவும்.ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து,இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி,மிளகுத்தூள், நறுக்கியகொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு:கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படிவித்தியாசமாக செய்துசாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


பானங்களைவிட, இதுஅதிக நேரம் பசி தாங்கும். துவரம்பருப்பு சூப் தேவையானவை:துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு,மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு,வெங்காயம் – 1. செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாகவேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில்அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கியவெங்காயம், உப்புசேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும்.அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள்,நறுக்கியகொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும். குறிப்பு: பசியைத் தூண்டும்தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில்உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள்இதனைச்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சாப்பிடலாம். வெஜ் ஃபிஷ் ஃப்ரைதேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட்,முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை -ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலாகால் கப், மிளகுத்தூள் -கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கியகாய்களைப் போட்டு பச்சைவாசனை போகும் வரைவதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவைஅதில்சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு,மிளகுத்தூள் சேர்த்துவதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவுகை பொறுக்கும் சூட்டில்இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை,தவாவில் போட்டுஇருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். குறிப்பு: காய்கறிகள்சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்துகொடுத்தால் விரும்பிச்சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும்கிடைக்கும். கீரை

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கோஃப்தாகறி தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை -ஒரு கட்டு, பனீர்துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1,வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காயவிழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையானஅளவு. செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவியபனீர், வேக வைத்து மசித்தஉருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்துஉருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரைஉருண்டைகளைப் போட்டுபொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதைசேர்த்து, பச்சைவாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில்பொரித்தகோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும். குறிப்பு:அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவதுஒருமுறை செய்துஉண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


உண்ணும்உணவு லைட்டாகஇருத்தல் நலம். கீரை ரொட்டி தேவையானவை: அரிசி மாவு -கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம்மைதா – ஒருடேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஆய்ந்தகீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசிமாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர்விட்டு நன்குபிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறுஉருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும். அவற்றைசப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு,இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச்சுட்டு எடுக்கவும். குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதேபோல்செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு! மிக்ஸட் ரொட்டிகாய்கறி சட்னி

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு,கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட்,உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர்கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்தமிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்புசேர்த்து, தண்ணீர் விட்டுநன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாகசப்பாத்திக் கல்லில்தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல்சுட்டுஎடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டிதயார். கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு,காய்ந்தமிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து,உப்புசேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத்தொட்டுச்சாப்பிடலாம். குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும்சத்துக்களும்சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடுஉள்ளவர்கள்இதனை

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும். நூல்கோல்சப்பாத்தி தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாகநறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரைகிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1,கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: நூல்கோலை வேகவைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம்எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப்பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடிவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து,நறுக்கிய வெங்காயம் சேர்த்துவதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும்வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும்.பிசைந்த மாவில்கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கியநூல்கோலைகொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டுஎண்ணெய்விடாமல் சுட்டு எடுக்கவும். குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச்சாப்பிடாதவர்கள், இதேபோல்செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில்நூல்கோலுக்கு
« Last Edit: February 22, 2016, 05:18:03 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


முக்கியஇடம் உண்டு. நவரத்தின புலாவ்தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள்,டிபார்ட்மென்ட்ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட்கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் -தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி,குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில்எண்ணெய்விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது,கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைவதக்கவும். நீளமாகநறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும். ஊற வைத்த சாமைஅரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன்சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்குஇரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துகுக்கரில் வைத்து மூடவும். மிதமானதீயில் வைத்து, 3 விசில் வந்ததும்இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கியகாய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கியகாய்கறிகளை சேர்த்துக்கிளறிப் பரிமாறவும். குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும்புலாவுக்கு இணையான சுவையுடன்கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிகசத்து நிறைந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


கலர்ஃபுல் புட்டு தேவையானவை: அரிசிமாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்துநறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர்விட்டு புட்டு மாவுபதத்தில் பிசறிக் கொள்ளவும்.புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில்வைத்து,அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசிமாவுடன்கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய்துருவலைத் தூவவும்.அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறியகீரையை வைக்கவும். அதன்மேல்கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து,வெந்ததும் கம்பியால் புட்டை வெளியேஎடுத்துப் பரிமாறவும். குறிப்பு:கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய்கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால்எல்லா

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


வயதினரும்சாப்பிடலாம். தர்பூசணி மசாலா தேவையானவை: தர்பூசணி -கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு -தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒருடீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒருடீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆறவைத்துமிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியைசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டுவிழுதுசேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளிபேஸ்ட்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச்சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்துபரிமாறவும். குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படிமசாலாவாகவும்செய்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன்இருக்கும். முளைகட்டிய பயறு சாலட் தேவையானவை:பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை -ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள்,உப்பு – தேவையானஅளவு. செய்முறை: எல்லாபயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.அவற்றைக்கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைக்கவும். மறுநாள்காலையில் அவைமுளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன்நறுக்கியவெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள்கலந்து பரிமாறவும். குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்துஇல்லாத இயற்கைவழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம்.நொறுக்குத் தீனிஅதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டுஅவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம். பாகற்காய் அல்வா

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226319
  • Total likes: 28786
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீசர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒருடீஸ்பூன். செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி,கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும்வடிகட்டிய நீரைசூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன்பால்சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும்ஒன்றாகக்கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும். குறிப்பு:பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படிசெய்துகொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும்தன்மைகொண்டவை. —————————————————————————————————————————————
நாலு படி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க,வெயிட்டக்குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்…வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…
“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம்பண்றா?”என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.
உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துமற்றும்சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பதுநிபுணர்களின்கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக்காரணம்…நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள்,காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக்கொள்வதில்லை.
‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில்வெரைட்டியானஉணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’என்பதுமருத்துவர்களின் அறிவுரை.
இதையெல்லாம் அலசி ஆராயும் கேட்டரிங் கல்லூரி முதல்வர் ”நெகட்டிவ்கலோரிஉணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராகஇருக்கும். அதாவது,நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல்செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காகஇருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ்கலோரி உணவுப் பொருள். இத்தகையநெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம்ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோஎடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு,அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக்காண்பித்திருக்கிறார்.
“தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல்எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்தரகசியத்தைக்கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச்சொல்கிறார்