Author Topic: ~ 30 வகை டயட் சமையல்! வெரைட்டியா சாப்பிடலாம்.. வெயிட்டையும் குறைக்கலாம்… ~  (Read 966 times)

Offline MysteRy



முட்டைகோஸ் சூப்தேவையானவை:முட்டைகோஸ் -கால் கிலோ,மிளகு, சீரகம்,இஞ்சி-பூண்டுவிழுது – தலாஒரு டீஸ்பூன்,எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: கடாயில்எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம்,இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்துநன்கு வதக்கவும். பச்சைவாசனைபோனதும், நறுக்கிய முட்டைகோஸ்சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர்விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து,கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமானசூட்டில் பரிமாறவும். குறிப்பு: காலையில் தினமும் வெறும்

Offline MysteRy



வயிற்றில் பருகி வர, உடல்கொழுப்புகரையும். ஃப்ரூட்ஸ் அடை தேவையானவை: அரிசி – ஒருகப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100கிராம். உப்பு – தேவையான அளவு. செய்முறை: அரிசி,கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித்தனியாக ஊற வைத்துக் கழுவிக்கொள்ளவும். மூன்றையும்ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும்.மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கியஆப்பிள்,அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதைதோசைக்கல்லில்அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டுஎடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார். குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும்குழந்தைகள் கூட இதை

Offline MysteRy



விரும்பிசாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன்இது! பழ பாயசம் தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டைநீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளைமுத்துக்கள் – கால்கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20,பால் – ஒருகப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம். செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும்.அவற்றை மிக்ஸியில்போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டியஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்தபால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துநன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில்தண்ணீர் விட்டு, கொதித்ததும்சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழபாயசம் ரெடி! குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போதுகுறைந்தகலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம். கம்பு ரொட்டி

Offline MysteRy



தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1,தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி -சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்புசேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாகசுட்டெடுக்கவும். சுட்டரொட்டிகளை சிறு சிறுதுண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துமீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்துநன்கு கலந்து, நறுக்கியகொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும். குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது.அதிக நேரம் பசி தாங்கும் என்பதால்நொறுக்ஸ் சாப்பிடும்

Offline MysteRy



எண்ணம் தோன்றாது.பட்டாணிகேரட் அடை தேவையானவை: பட்டாணி – கால்கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரைகப்,எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:பட்டாணியை ஊற வைத்துக் கழுவிமிக்ஸியில் நன்குஅரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம்,பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவுபதத்தில்கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில்போட்டு, எண்ணெய் விட்டுசுட்டு எடுக்கவும். குறிப்பு:பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’அதிகமுள்ளது. இவை இரண்டையும்

Offline MysteRy



கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத்தேவையானசத்து கிடைக்கிறது. பருப்புக் கூட்டு தேவையானவை:பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1,குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன்,பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைக்கவும். ஊறவைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்புசேர்த்துபாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும்.கடாயில்எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்குவதக்கவும். நறுக்கியதக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்துகரைந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும்இறக்கவும். குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது.தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக்

Offline MysteRy



கூட்டு.மிளகுதானிய சூப் தேவையானவை: ஊற வைத்தபாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணிஇலை – 2, வெங்காயம்நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம்,மிளகுத்தூள் – தலாஅரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,மிளகு, பிரியாணி இலைதாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்துநன்குவதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்துதண்ணீர்சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கியகொத்தமல்லி,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துஇறக்கி சூடாகப்பரிமாறவும். குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்டபிரச்னைகளைத்தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

Offline MysteRy



காய்கறி உப்புமா தேவையானவை:ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்குகலவை – ஒரு கப், தக்காளி – 2,வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2,இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் -ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரைடீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் -ஒருசிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,எலுமிச்சைச் சாறு – ஒருடேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம்தாளிக்கவும்.பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்குவதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளிபோட்டுக் கலந்து, நறுக்கியகாய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன்வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேகவிடவும். இறக்குவதற்கு முன், தயிர்சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி,எலுமிச்சைச் சாறு கலந்துபரிமாறவும். குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில்கலந்திருக்கும் டிபன் இது! அதிககலோரி

Offline MysteRy



இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும்உகந்தது. தினை மாவு அடை தேவையானவை: தினை மாவு -ஒரு கப் (பெரியமளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும்காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு,வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை -சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்துருவல்டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலாகால்கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை:கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாகஊறவைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன்சேர்த்து அடை மாவுபதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து,அதைஅடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக்கலந்துகொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்துஇருபுறமும்சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். குறிப்பு: இந்த அடை நிறையநேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும்இதில் அடங்கியிருப்பதால்ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

Offline MysteRy



பட்டாணிகாலிஃப்ளவர் கூட்டு தேவையானவை:பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்டகாலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம்,கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன்,கடலைப்பருப்பு – ஒருடீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரைடீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: பச்சைப் பட்டாணி,காலிஃப்ளவரைதனித்தனியாக வேக வைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலைதாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்புசேர்க்கவும். எல்லா தூள்களையும்ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சைவாசனை போனதும், வேக வைத்தபட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும்இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குதொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்தகாய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக்கட்டுப்படுத்தும். கொண்டைக்கடலை மசாலா

Offline MysteRy



தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கியவெங்காயம், தக்காளி – தலா 2, சாட்மசாலாத்தூள் – ஒருடீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒருடேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒருசிட்டிகை, தேங்காய்ப் பால் -முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக்கழுவி,வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில்எண்ணெய் விட்டுகடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளிசேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளைசேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒருகொதி வந்ததும்தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்கவிடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து,லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ளநல்ல சைட் டிஷ். இதை, காலைநேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.புளிப்புஇனிப்பு

Offline MysteRy



காளான் தேவையானவை: காளான் – அரை கப்,நன்கு கழுவிநறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ்,காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப்,வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையானஅளவு, கரம்மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -தேவையானஅளவு. செய்முறை: சுடுநீரில் காளானைக்கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேகவைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு,அரைத்தவிழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளிசாஸ§டன்சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல்தக்காளிசாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம்போட்டுசிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாகவதக்கிப்பரிமாறவும். குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்,அனைத்துவிட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச்சாப்பிடுவார்கள். இதைக்

Offline MysteRy



கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.முளைகட்டிய தானிய சப்பாத்தி தேவையானவை: பாசிப்பருப்பு,கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால்கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவேதனித்தனியாகஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒருதுணியில் கட்டி வைக்கவும். மறுநாள்காலையில், அவைநன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டியதானியங்களைஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக்கலந்து கொள்ளவும். மைதா மாவில்உப்பு, தண்ணீர் சேர்த்து,சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். மாவை சிறுகிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக்கலவையை கொஞ்சமாக உள்ளேவைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாகஉருட்டவும். தேய்த்த பரோட்டாக்களைதோசைக்கல்லில் போட்டு, இருபுறமும்கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்துசுட்டெடுக்கவும். குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும்ஒருங்கேகிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர…சத்துக்குறைபாடுகள்

Offline MysteRy



நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும். வாழைப்பூ அடைதேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்,அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப்வெங்காயம் – 3, கடுகு – கால்டீஸ்பூன், கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானஅளவு. செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத்தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்தமாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்புசேர்த்து அடைமாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில்அடைகளாக வார்த்துஇருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டுஎடுக்கவும். குறிப்பு:வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவானஎண்ணெயைப்பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமானஉணவாகும். அதிக

Offline MysteRy



நேரம்பசி தாங்கும். பார்லி மசாலா சாதம் தேவையானவை: பார்லி,பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை,கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒருடீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊறவைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுபட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கியவெங்காயம்,தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும்,கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்துவரும்வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்துசூடாகப்பரிமாறவும். குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனைகுறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்துசாப்பிட… சுவையாக