Author Topic: ~ மசாலா சப்பாத்தி ~  (Read 500 times)

Online MysteRy

~ மசாலா சப்பாத்தி ~
« on: February 21, 2016, 09:25:20 PM »
மசாலா சப்பாத்தி



தேவையானவை:

கோதுமை மாவு – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கரம் மசலாத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். தோசைக் கல்லில் சப்பாத்தியை போட்டு, சுற்றி லும் எண்ணெய் விட்டு, வேக வைத்து எடுத்து… சூடாகப் பரிமாறவும்.