அக(ல்) விளக்கு
ஓ மானிடரே
வெளிச்சத்தை வெளியே தேடுவதேன்
அகல் விளக்கொன்று
அழகாய் எரிந்திட
அவரவர் அகத்தினிலே
தொடர்பு
கடலோடு என்ன உறவு கண்களுக்கு
கண்ணீரும் கரிக்கிறதே
உப்பாய்
உறுதி
வானத்தில் விரிசல் விழுவதில்லை - இடி
மின்னல் வந்து தாக்கிய போதும் - அது
உடைந்து போவதில்லை
உன் உள்ளமும் அதுபோல
உறுதியாய் இருக்கட்டும்
வழித்துணை
தொலைதூர இரவு நேர
இரயில் பயணத்தில்
மரங்கள், கட்டிடங்கள், கம்பங்கள்
எல்லாம் வேகமாய்
என்னைக் கடந்து சென்றன
தூரத்தில் தெரிந்த நிலா மட்டும்
என் கூடவே வந்து கொண்டிருந்தது
பயண நெடுகிலும்
வழித் துணையாக