Author Topic: ~ ராகிக் கஞ்சி சத்துணவு ~  (Read 325 times)

Offline MysteRy

~ ராகிக் கஞ்சி சத்துணவு ~
« on: February 19, 2016, 09:37:37 PM »
ராகிக் கஞ்சி சத்துணவு



தேவையானவை:

ராகி மாவு – 3 டேபிள்ஸ்பூன், உப்பு, தண்ணீர், மோர் – தேவையான அளவு.

செய்முறை:

ராகி மாவைச் சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இளஞ்சூடாக இருக்கையில், சிறிது மோர் கலந்து அருந்தலாம்.
பலன்கள்: புரதம், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். எலும்புகள் உறுதியாகும். பெண்களுக்கு வயதான காலத்தில், எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுக்கும். கேழ்வரகை ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் உறுதியாகும்.