கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
 கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
 கடைகால், கடக்கால் - அடித்தளம்
 கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
 
கடையாணி - அச்சாணி
 கரடு - சிறு குன்று
 கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
 குக்கு - உட்கார்
 கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
 கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
 கொரவளை \ தொண்டை -குரல்வளை
 கொழுந்தனார்- கணவரின் தம்பி
 கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
 சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
 சாங்கியம் - சடங்கு
 சிலுவாடு - சிறு சேமிப்பு
 சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
 சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
 சுல்லான் (சுள்ளான்?) - கொசு
 செகுனி, செவுனி - தாடை/கன்னம்
 செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
 சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
 சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )