Author Topic: ~ அப்பளக் குழம்பு ~  (Read 305 times)

Offline MysteRy

~ அப்பளக் குழம்பு ~
« on: February 18, 2016, 08:55:04 PM »
அப்பளக் குழம்பு



தேவையான பொருட்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
சின்ன பூண்டு – 10 பல்,
சின்ன வெங்காயம் – 10,
உளுந்து அப்பளம் – 2,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா கால் ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும்.
* பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
* சுவையான அப்பளக்குழம்பு ரெடி.