Author Topic: ~ பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்! ~  (Read 334 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226754
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவதற்கான 10 காரணங்கள்!



புளிப்பு, இனிப்பு சுவை கொண்ட பம்பளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
1. ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது.

2. பித்தப்பை கற்களை கரைத்து, கல்லீரலை தூண்டசெய்கிறது.
3. இந்த பழத்தில் உள்ள லைகோபீன் என்னும் நிறமி புற்றுநோய் செல்களை மற்றும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டது.
4. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது.
5. சாப்பாட்டிற்கு முன் இதனை உட்கொள்வதன் மூலம் இன்சுலினை நன்கு சுரக்க வைக்கமுடியும்.
6. மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.
7. நார்ச்சத்து, லைகொபீன் நிறமி, வைட்டமின் சி, கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதயத்தை பலமாக்குகிறது.
8. இதில் பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
9. தோலில் சுருக்கம், கருந்திட்டுகள் ஏற்படாது. இதில் உள்ள அமினோ அமிலம் தோலை இறுக்கமாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. முகத்தில் அதிகம் எண்ணெய் சுரப்பதை கட்டுபடுத்தி, பிசுபிசுப்பை நீக்குகிறது.
10. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் செரிமான மண்டலத்தை தூண்டி மலச்சிக்கலை போக்குகிறது.