Author Topic: ~ உருளைக்கிழங்கு சாதம் ~  (Read 326 times)

Offline MysteRy

~ உருளைக்கிழங்கு சாதம் ~
« on: February 18, 2016, 07:41:51 PM »
உருளைக்கிழங்கு சாதம்



தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ
மல்லி விதை – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
பட்டை – 1
கிராம்பு – 2
பூண்டு – 4 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கசகசா – ஒரு தேக்கரண்டி
தேங்காய் – 3 சில்லு
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கினை உப்பு போட்டு வேக வைத்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
முழுக் கொத்தமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வறுத்த மல்லியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய், கசகசா, கொத்தமல்லி தழை ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி, கடுகு தாளித்து பின்பு உருளைக்கிழங்கினை போட்டு வதக்க வேண்டும்.
கிழங்கு சற்று வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைப் போட்டு வதக்க வேண்டும்.
இந்த உருளைக்கிழங்கு மசாலாவை உப்பு போட்ட சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.