Author Topic: ~ செட்டிநாடு மீன் வறுவல் ~  (Read 350 times)

Offline MysteRy

செட்டிநாடு மீன் வறுவல்



மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
தனியாத்தூள் – 5 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
மிளகு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 3 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.

மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.