Author Topic: ~ புளிப்பு கார போண்டா ~  (Read 373 times)

Offline MysteRy

~ புளிப்பு கார போண்டா ~
« on: February 14, 2016, 10:05:23 PM »
புளிப்பு கார போண்டா



தேவையான பொருட்கள்:

 கடலைப்பருப்பு – ½ கப் துவரம்பருப்பு – ½ கப் உளுத்தம்பருப்பு – ¼ கப் பச்சரிசி – ¼ கப் காய்ந்த மிளகாய் – 4 புளி – சிறிதளவு பெருங்காயம் – ½ டீஸ்பூன் தேங்காய் துருவல் – ¼ கப் உப்பு – ருசிக்கேற்ப எண்ணெய் – பொறித்தெடுக்க

செய்முறை:

பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள். அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுங்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.