Author Topic: ~ கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா ~  (Read 457 times)

Offline MysteRy

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா



தேவையானவை:

உளுத்தம் மாவு – 100 கிராம், அரிசி மாவு – 20 கிராம், எண்ணெய் – 250 கிராம், உப்பு – ஒரு சிட்டிகை.
ஸ்டஃப்பிங் செய்ய: கடலைப் பருப்பு – 200 கிராம் (வேகவைத்து மசிக்கவும்), தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பொடித்த வெல்லம் – 150 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து வடிகட்டி… மசித்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து நெய் விட்டு நன்கு கிளறி, பூரணப் பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும். இதை உருண்டகளாக உருட்டவும்.
உளுத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் எரியவிடவும். சூடு அதிகமானால் போண்டா எண்ணெ யில் கரைந்துவிடக்கூடும்).