Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வீட்டுக்குறிப்புக்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வீட்டுக்குறிப்புக்கள் ~ (Read 715 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222689
Total likes: 27679
Total likes: 27679
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வீட்டுக்குறிப்புக்கள் ~
«
on:
February 11, 2016, 07:32:19 PM »
வீட்டுக்குறிப்புக்கள்
உப்பைக் கொட்டும்போது... * தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும். * தோசைக்கு அரைக்கும் போது அரிசியுடன் 1 ஸ்பூன் துவரம் பருப்புபையும், 1 ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறு மொறுவென்றிருக்கும். * தயிர் மிகவும் புளித்து விட்டால் அத்துடன் 4 பங்கு தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்திருக்கவும். 1/2மணி நேரம் கழித்து மேலே தெளிந்து நிற்கும் நீரை வடிகட்டி விட்டால் கீழே உள்ள தயிரில் புளிப்பு குறைந்து விடும். * உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது, தண்ணீரில் 1 ஸ்பூன் வினிகரை ஊற்றி வேகவைத்தால் கிழங்கு நல்ல வெள்ளையாக இருக்கும். விரைவில் வெந்து விடும். * அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது. * கீரை பசுமை மாறாமல் இருக்க அதனை செய்தித்தாளில் மடித்து வைக்கலாம். * பூண்டு பற்களை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் மிக எளிதாக உரிக்கலாம். * ஆட்டிறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யும் கறி வகைகளில் சிறிதளவு வறுத்த பார்லி மாவைச் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும். * பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சீனியைச் சேர்த்தால் பட்டாணி நிறம் மாறாமல் இருக்கும். * கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும். * பருப்பை வேகவைக்கும் போது 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு விரைவாக வெந்து விடும். * பிரெட் புதிதாக இருந்தால் துண்டுகள் போட வராது. கத்தியை நெருப்பு அனலில் லேசாக சூடுபடுத்திக் கொண்டு பிரெட்டை வெட்டினால் துண்டுகள் அழகாக வரும். * சப்பாத்திமாவுடன் சிறிதளவு சமையல் சோடாவைச் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். * உப்பை ஜாடியில் கொட்டும் போது 1 ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது. * குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால், குருமா குழம்புப் பதமாக வரும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வீட்டுக்குறிப்புக்கள் ~