Author Topic: ~ உடலினை உறுதி செய் - ஷாங்காசனாஃபிட்னெஸ்! ~  (Read 398 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226754
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடலினை உறுதி செய் - ஷாங்காசனாஃபிட்னெஸ்!


கீழ் உடல், மேல் உடல் என உடலின் எல்லா பகுதிகளையும் இணைத்து செய்யப்படும் பயிற்சி இது. உடலை உறுதிபடுத்துவதுடன், மனப்பிரச்னை களையும் போக்கக்கூடிய ஆசனம்.

கால்களை மடக்கி, பாதங்கள் மீது அமர வேண்டும். நிமிர்ந்து இருக்க வேண்டும், கைகளைத் தொடை மீது வைத்துக்கொள்ள வேண்டும். இது வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடி 10 விநாடிகள் ஓய்வாக இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்தபடியே கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மூச்சை விட்டபடியே, நெற்றி மற்றும் கை தரையில் பதியும் அளவுக்கு மேல் உடலை வளைக்க வேண்டும். ஐந்து விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.



*யோகாவுக்குத் தயாராகும் முன் கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகள் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.

பலன்கள்

முதுகெலும்பு டிஸ்க்கில் அழுத்தத்தை வெளியேற்றும்.

முதுகெலும்பு டிஸ்க் தொடர்பாக ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் தரும்.

அட்ரினல் சுரப்பிகள் சீராகச் செயல்பட உதவும்.

இடுப்புத் தசைகள், சியாடிக் நரம்பு பிரச்னைகள், பெண் மற்றும் ஆண் இனப்பெருக்க மண்டல செயல்திறனை மேம்படுத்தும்.



மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.

மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவும். மனச்சோர்வு, தூக்கமின்மை, கவலை, சோர்வு நீங்கும்.

நினைவுத்திறன், கவனிப்புத்திறன், நல்ல உணர்வுகள் தோன்றுதல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பு: மூட்டு, முதுகு வலி உள்ளபோதும், மயக்கம், நடுக்கம், காய்ச்சல் சமயங்களிலும் இந்த யோகாவைத் தவிர்க்க வேண்டும்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்