Author Topic: ~ கந்தரப்பம் ~  (Read 328 times)

Offline MysteRy

~ கந்தரப்பம் ~
« on: February 09, 2016, 10:48:28 PM »
கந்தரப்பம்



தேவையானவை:

பச்சரிசி – 2 கிண்ணம், உளுந்து – கால் கிண்ணம், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி, வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பொடித்த வெல்லம் – இரண்டரை கிண்ணம், தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி, ஏலக்காய்த் தூள் – ஒரு தேக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.