Author Topic: ~ சுண்டைக்காய் பச்சடி ~  (Read 312 times)

Offline MysteRy

~ சுண்டைக்காய் பச்சடி ~
« on: February 09, 2016, 10:05:20 PM »
சுண்டைக்காய் பச்சடி



தேவையானவை:

சுண்டைக்காய் – ஒரு கிண்ணம், துவரம்பருப்பு – அரை கிண்ணம், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 4, புளி – கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா தேக்கரண்டி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:

வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
கீரை மண்டி

தேவையானவை:

கீரை – ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, அரிசி கழுவிய நீர் – 2 கிண்ணம், தேங்காய்ப் பால் – கால் கிண்ணம், கடுகு, வெந்தயம் – தலா அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).