Author Topic: ~ வாழையிலை மசாலா மீன் ~  (Read 413 times)

Offline MysteRy

~ வாழையிலை மசாலா மீன் ~
« on: February 08, 2016, 08:53:00 PM »
வாழையிலை மசாலா மீன்



தேவையான பொருட்கள்:

வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் – 2 துண்டுகள்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புளி – கொட்டைப்பாக்கு அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
வாழை இலை – 2 துண்டுகள்

செய்முறை:

1.மீனை மசாலா தடவி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2.வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
4.அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, புளியை கரைத்து ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
5.வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.
6.அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும்.
7.தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.
8.சுவையான வாழையிலை மசாலா மீன் தயார். கேரள உணவான இது அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.