எங்கோ இருந்து சுவாசிக்கிறாய்
உன் சுவாச வாசத்தை யாசிக்கிறேன்
தமிழ்கவிதை சுவையாய் யோசிக்கிறேன்
அதை தேசியகீதமென நேசிக்கிறேன்
தேடித்தேடி நான் துவளுகின்றேன்
கிடைப்பது என்றோ அறியவில்லை
காற்றில் கலந்திடும் வாசம் அது
உன் சுவாசமெனும் ரகசியம் புரியவில்லை
(எங்கோ இருந்து சுவாசிக்கிறாய் )
மெரீனா கரையே கடற்கரையே
நீயும்.நானும் ஒரு சாதி
நிறை ஆசை இருந்தும்
தழுவியதில்லை
அதனால் நாமும் சரிபாதி
இதயத்தை இயக்கும் உன் நினைவால்
என் மீத ஆயுளும் துடித்திருப்பேன்
உன் நினைவுகள் மட்டுமிங்கு இல்லையென்றால்
நான் என்றோ துடிப்பை முடித்திருப்பேன்
(எங்கோ இருந்து சுவாசிக்கிறாய்) )
மறக்கும் வாய்ப்பில்லா உன் நினைவு
என் மனதள்ளி கொடுத்த லாபங்களா?
இறக்கும் நிலையை நிதம் பழக்கி
நீ வரமாய் வழங்கிடும் சாபங்களா ?
எந்தன் காதலை வடிப்பதற்கு
கடல்போல் நிலபரப்பு பெரிதில்லையே
அந்த கடலைபோல் பொங்குதற்கு
அத்தனை அலைகள் எனக்கில்லையே
எங்கோ இருந்து சுவாசிக்கிறாய்
உன் சுவாச வாசத்தை யாசிக்கிறேன்
தமிழ்கவிதை சுவையாய் யோசிக்கிறேன்
அதை தேசியகீதமென நேசிக்கிறேன்
தேடித்தேடி நான் துவளுகின்றேன்
கிடைப்பது என்றோ அறியவில்லை
காற்றில் கலந்திடும் வாசம் அது
உன் சுவாசமெனும் ரகசியம் புரியவில்லை .........