Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அழகை அதிகரிக்கலாமா? இதோ 10 ஐடியாக்கள் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ அழகை அதிகரிக்கலாமா? இதோ 10 ஐடியாக்கள் ~ (Read 419 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226754
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ அழகை அதிகரிக்கலாமா? இதோ 10 ஐடியாக்கள் ~
«
on:
February 07, 2016, 10:42:50 PM »
அழகை அதிகரிக்கலாமா? இதோ 10 ஐடியாக்கள்
அழகை அதிகரிப்பதற்கு பல்வேறு விதமான குறிப்புகள் உள்ளன.
அந்த குறிப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால், நமக்கு இருக்கும் அழகை விட கொஞ்சம் அதிகரிக்கும், ஆனால் வரையறையின்றி சென்றால் அலங்கோலம்தான் என்பதனை நினைவில் கொள்க,
கால், கை, முகம், கூந்தல் என ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குறிப்புகள் இருந்தாலும், இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமான குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.
1. பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும்.
2. கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முடி அழகு பெறும்.
3. தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
4. வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் பரு வராமலும், கறுத்துப் போகாமலும் இருக்கும்.
5. ஒரு லிட்டர் இளஞ்சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
6. கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கத்துடனும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
7.இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன், பயத்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும்.
8. பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
9.முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால், முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
10. பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ அழகை அதிகரிக்கலாமா? இதோ 10 ஐடியாக்கள் ~