Author Topic: ~ பரங்கிக்க்காய் அடை ~  (Read 304 times)

Online MysteRy

~ பரங்கிக்க்காய் அடை ~
« on: February 06, 2016, 12:00:25 AM »
பரங்கிக்க்காய் அடை



தேவையானவை

பச்சரிசி - 2 கப், கடலைப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் பரங்கிக்காய் துருவியது - தலா 1 கப், பச்சைமிளகாய், சிவப்பு மிளகாய் - தலா 3, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் தனித் தனியாக ஊறவைக்க வேண்டும். பருப்பை சிறிது முன்கூட்டியே ஊறவைத்துவிட வேண்டும். ஏனெனில், கடலைப் பருப்பு ஊற, சிறிது நேரம் ஆகும். நன்கு ஊறியதும், இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொர கொரவென்று அரைக்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சை மிளகாயை ஊறவைத்து தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த மாவில் தேவையான மிளகாய் விழுது, உப்பு, வெங்காயம், பரங்கிக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லியைக் கலக்க வேண்டும். தோசை செய்வதுபோல கொஞ்சம் திக்காக அடைபோல தவாவில் சுட்டு எடுக்கலாம். இதற்கு வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

பரங்கிக்காயைச் சாப்பிடாதவர்களும் இந்த அடையை விரும்பிச் சாப்பிடுவர். சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற சத்தான உணவு.

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். அதே சமயம், சீக்கிரமே பசிக்காது. திடமான காலை உணவாக அமையும்.

வைட்டமின் சி, ஏ, புரதச்சத்து நிறைந்துள்ளதால், காலை உணவாகச் சாப்பிட ஏற்றது.