Author Topic: ~ டிரை கிரெய்ன் ரொட்டி ~  (Read 321 times)

Offline MysteRy

~ டிரை கிரெய்ன் ரொட்டி ~
« on: February 05, 2016, 11:58:16 PM »
டிரை கிரெய்ன் ரொட்டி



தேவையானவை

ராகி மாவு, தினை மாவு, கோதுமை மாவு, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 1 கப், கொத்தமல்லி - அரை கப் வறுத்து, பாதியாகப் பொடித்த வேர்க்கடலை - கால் கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ராகி, தினை, கோதுமை மாவைக் கொட்டி, துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் விழுது, உப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் கலந்து, சப்பாத்தி மாவைவிட லூஸாகப் பிசைய வேண்டும். தவாவில் அடைபோல, கையால் ரொட்டியைத் தட்டும் அளவுக்கு மாவைப் பிசைந்துகொள்ள வேண்டும்.

வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவு உருண்டையை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, சூடான தவாவில் வாழை இலையோடு அப்படியே கவிழ்த்துவிட வேண்டும். பொறுமையாக வாழை இலையை எடுத்துவிடலாம். எண்ணெய் ஊற்றத் தேவை இல்லை. ஏனெனில், வாழை இலையில் இருந்த எண்ணெயே போதுமானது. இதற்குத் தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

பலன்கள்

நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

வைட்டமின் சி, ஏ, இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமையும். எலும்புகள் உறுதியடையும்.

சுவையான ரொட்டியாக இருக்கும் மதிய உணவாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். வாழை இலையில் உள்ள ஸ்டார்ச் சத்தும் இதில் கிடைத்துவிடும்.