Author Topic: ~ தொழில் மரியாதையும் சுய மரியாதையும். ~  (Read 813 times)

Offline MysteRy

தொழில் மரியாதையும் சுய மரியாதையும்.



செருப்புக் கடைக்கு ஒருவர் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று அழைத்து , செருப்பை எடுத்துக்காட்டினார்.. அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.அவருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார்.. பணியாளர் விடவில்லை...
அவரே அவருக்கு உதவினார். அவர் பெருந்தன்மையாக சொன்னார் "அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது"
பணியாளர் சிரித்தபடி சொன்னார்
"இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என் சுய மரியாதை!
கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன். இது என் தொழில் மரியாதை!!