Author Topic: ~ உருளைக்கிழங்கு பக்கோடா ~  (Read 316 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு பக்கோடா



தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – கால் கிலோ
அரிசிமாவு – 2 கப்
தயிர் – அரை கப்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
வெந்தயக்கீரை – 50 கிராம்
பச்சைமிளகாய் – 6
இஞ்சி துண்டு – சிறியது
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கினை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
கீரையை சுத்தம் செய்து சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, தயிர், சுத்தம் செய்த கீரை,சர்க்கரை, பச்சை மிளகாய்,இஞ்சி,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கினை சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து கொள்ளவும்.
கலவையை எண்ணெயில் உதறி உதறி விடவும், மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.