Author Topic: ~ உளுந்து வடை ~  (Read 494 times)

Offline MysteRy

~ உளுந்து வடை ~
« on: February 01, 2016, 09:29:05 PM »
உளுந்து வடை



தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு : 250 கிராம்
சின்ன வெங்காயம் : 50 கிராம்
பச்சைமிளகாய் : 6
இஞ்சி, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு சிறிதளவு

செய்முறை

தோல் இல்லாத உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் நனைய வைத்து, சிறிது காயம் சேர்த்து அதிகம் இளக்கம் இல்லாமல் பொங்க ஆட்டித் தோண்டும் போது தேவையான உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி தோண்டவும்.

சின்ன வெங்காயம் வட்டம் வட்டமாகப் பொடியாக நறுக்கியது 50 கிராம், பச்சைமிளகாய் 6, இஞ்சி சிறிது, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.

வாணலியில் ரீபைண்ட் ஆயிலைக் காய வைத்து இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்துத் தட்டி நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையைப் போட்டு, வடைக் கம்பியால் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான உளுந்து வடை தயார்.

மாவில் 1 மேஜைக் கரண்டி அரிசிமாவு கலந்து சுட்டால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்