Author Topic: ~ KFC லாலி பாப் ~  (Read 313 times)

Offline MysteRy

~ KFC லாலி பாப் ~
« on: January 31, 2016, 05:54:51 PM »
KFC லாலி பாப்



தேவையான‌ பொருட்க‌ள்:
ஊறவைக்க


லெக் பீஸ் – எட்டு துண்டு
இஞ்சி – இரண்டு அங்குல துண்டு
பூண்டு – ஐந்து பல்
தக்காளி = ஒன்று
வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி
பிரட்டி கொள்ள
மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
மைதா – ஒரு கப்
கார்ன் மாவு – கால் கப்
உப்பு – சிறிது
எண்ணை + பட்டர் – பொரிக்க தேவையாண அளவு

செய்முறை

1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.
2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்
3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.
4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.
5. சுவையான kfc சிக்கன் லாலி பாப் ரெடி