பழையன ஒதுக்கி புதியன தேடும்
தை திங்களின் முன்நாள்
புதிதாய் முளைத்த உரமென்னும்
விசத்தை தொலைத்து இயற்கை உரம் தேடுவோம்
புதிதாய் அகதியான அடிமையான
குலமிங்கு மீண்டும் தரனியாள செய்வோம்
புதிதாய் மனை வேண்டி கீறி கெடுத்த மண்ணை
சீர்செய்து மீண்டும் பழைய விளைநிலமாக்குவோம்
புதிதாய் உழ வந்த இயந்திர வாகனத்தை விடுத்து
அடிமாடாய் போன உழுமாட்டை கொணர்வோம்
இப்படி இன்னும் பல புதுமைகளை ஒழித்து
மீண்டும் பழமை புகுதுவோம் வாரீர் இப்போகியில்
புத்தாடை, புதுப்பானை
பச்சரிசி பொங்கலிட்டு
செங்கரும்பை வெட்டி வைத்து
பொங்கும் பொங்கலில்
நம் துன்பமும் தொலைந்து
புதிதாய் பிறக்கும் தைமகளுடன்
நம் இன்பமும் பிறக்கட்டும்
ஓய்வில்லாமல் தன்னையே எரித்து
நாம் எரியாமல் காக்கும் ஆதவனுக்கும்
தன் உழைப்பை அர்பணித்து
தன் ரத்தத்தை பாலாக நமக்களித்து
சாணத்தை கூட உரமாக்கி
இறந்த பின்பும் உடலை உணவாக்கி
நாம் உண்ண உதவும்
கால்நடை கடுவுளுக்கும்
பொங்கலிட்டு நன்றி சொல்வோம்