Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்! ~ (Read 891 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222751
Total likes: 27707
Total likes: 27707
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்! ~
«
on:
January 30, 2016, 07:26:01 PM »
பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்!
பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?!தமிழ்ப்பெயர் விருப்பம், நாகரிகம், நியூமராலஜி போன்ற காரணங்களால் பெற்றோர் வைத்த பெயரை, அரசு முறைப்படி மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் இங்கே...
விண்ணப்பம்
பெயர் மாற்றம் செய்ய, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தால் (stationery and printing department) வழங்கப்படும் பெயர் மாற்றுப் படிவம் அல்லது அத்துறையின் ஆன்லைன் முகவரியில் பதிவிறக்கம் செய்யப்படும் பெயர் மாற்றுப் படிவத்தைப் பூர்த்திசெய்து, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, சுயசான்றொப்பமிட்டு, உரிய தகவல்களுடன் (பெயர் மாற்றத்துக்கு உரிய காரணங்களுடன்) விண்ணப்பிக்க வேண்டும். நகல் எடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாட்டில் பெயரை மாற்றம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அல்லது தமிழ்நாட்டில் நிரந்தர முகவரி உடையவராக இருக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் எனில் பழைய பெயருக்கு உரிய ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழ்/கல்விச் சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். முகவரிச் சான்றாக, குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்டின் நகலில் சுயசான்றிட்டு இணைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பிறந்தவர் எனில் மேலே கூறிய சான்றுகளுடன் வட்டாசியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் அரசு மருத்துவரிடம் வயதினை நிரூபிக்க உரிய சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பெயர் மாற்றத்துக்குக் காரணம், தூயதமிழில் பெயர் சூட்டிக்கொள்ள என்றால், அதற்குக் கட்டணமாக ரூபாய் 50+15 (அஞ்சல் + அரசிதழ் கட்டணம்) பெறப்படுகிறது. வேறு எந்தக் காரணத்துக்காகப் பெயர் மாற்றம் செய்தாலும் ரூபாய் 415 செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு முற்றிலும் இலவசம்.
தத்தெடுக்கும் குழந்தைக்கு...
குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அக்குழந்தையின் பெயரை மாற்றம் செய்ய விரும்பினால் தத்தெடுப் பவர்களே விண்ணப்பிக்க முடியும். தத்தெடுப்பை உறுதிசெய்யும் சான்றிதழ் மற்றும் இணைக்க வேண் டிய ஆவணங்களையும் இணைத்து, உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை
பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரையும், மதியம் 2.00 மணிமுதல் 3.00 மணிவரையும் நேரில் செலுத்தலாம். இயலாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலை எடுத்து அனுப்பலாம். போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
முகவரி:
உதவி இயக்குநர் (பப்ளிகேஷன்)
எழுதுபொருள் இயக்குநரகம்
சென்னை-2
வயது அடிப்படையிலான விதிகள்
பொதுவாக விண்ணப்பத்தில் பெயர் மாற்றுபவர் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆனால், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், விண்ணப்பதாரரின் பெற்றோர் கையொப்பமிடலாம். பெற்றோர்கள் இல்லாதபட்சத்தில் பாதுகாப்பாளர் கையொப்பமிடலாம். ஆனால், அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான சான்றினை வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதைக் கடந்தவராக இருந்தால் பதிவு பெற்ற மருத்துவரிடம் `லைஃப் சடிஃபிகேட்’டின் (life certificate) அசலைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
திருமணம், விவகாரத்துக்குப் பின் செய்யும் பெயர் மாற்றம்
பெண்கள் திருமணத்துக்குப் பின் கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பினால் படிவம் 2-ஐ பூர்த்தி செய்து திருமணச்சான்றிதழுடன் இணைத்து உரிய கட்டணத்தைத் செலுத்த வேண்டும். இதேபோல, விவாகரத்தான பின் பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் விவாகரத்துச் சான்றிதழை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
மதமாற்றத்தினால் பெயர் மாற்றம்
மதமாற்றத்தினால் பெயர் மாற்றம் செய்பவர்கள், மதமாற்று பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து மதம் மாறியதற்கான சான்றிதழின் அசல், பழைய பெயருக்கு ஆதரமாக பிறப்புப் சான்று/கல்விச் சான்று மற்றும் முகவரிச்சான்று இணைத்து, உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
காத்திருப்பு நேரம்
நேரில் விண்ணப்பிப்பவர் களுக்குக் காத்திருப்புக் காலம், ஒரு வாரம்; தபாலில் விண்ணப்பிப்பவர் களுக்கு 15 நாட்கள்.
நிபந்தனைகள்
பெயர் மாற்றம் செய்ய உரிய காரணம் இருக்கவேண்டும்.
விண்ணப்பத்தில் தரப்படும் முகவரியில் கதவு எண், பின்கோடு எண் போன்றவற்றை தவறில்லாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த ஊரில் வசித்தாலும் அவர் பிறந்த ஊரினையே விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.
விண்ணப்பதாரர் தான் மாற்றம் செய்யும் பழைய பெயரினைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர் தன்னுடைய பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும்.
பழைய பெயர் மற்றும் புதிய பெயரினை இணைத்து அரசிதழில் (கெஜட்டில்) பிரசுரம் செய்யப்படமாட்டாது உதாரணமாக பழனி என்கிற கார்த்தி என்றில்லாமல், கார்த்தி என்று மட்டுமே இருக்கும்.
கெஜட்டில் புதிய பெயர் பிரசுரம் செய்யப்பட்ட பின் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை ஆறு மாத காலத்துக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்குப் பின் பிழைகளைத் திருத்தம் செய்யக்கோரும் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது.
பெயர் மாற்றத்துக்கான சான்று
பெயர் மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு, அந்தப் புதுப்பெயர் கெஜட்டில் வெளியிடப்பட்ட 5 நாட்கள் கழித்து, அதன் 5 நகல்கள் வழங்கப்படும். கூடுதல் பிரதிகள் தேவைப்படின் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் தபால், ஒருவேளை தபால் துறையால் திருப்பி அனுப்பப்பட்டால் (முகவரி தவறு போன்ற காரணத்தால்), விண்ணப்பதாரர் 6 மாதத்துக்குள் நேரில்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலதிகத் தகவல்களுக்கு...
www.stationeryprinting.tn.gov.in
என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம். 044-28544413, 044 - 28544412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?! ஒரு டஜன் யோசனைகள்! ~