Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~  (Read 961 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226539
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ டிப்ஸ்... டிப்ஸ்...! ~
« on: January 30, 2016, 05:37:46 PM »
டிப்ஸ்... டிப்ஸ்...!

ஒல்லியான பெண்கள், பாலில் தேன் கலந்து தினம் இருமுறை சாப்பிட்டு வந்தால்.. உடலில் சதைபோடும்.

தேங்காயை உடைத்த தும், கண் உள்ள பாகத்தை முதலில் உபயோகித்துவிட வேண்டும். ஏனெனில், அந்தப் பகுதிதான் விரைவில் கெட்டுப்போகும்.

பெண்கள் சிலருக்கு அரும்பு மீசை இருக்கும். அவர்கள் குப்பைமேனி இலை, வேப்பிலை, விரலி மஞ்சள் மூன்றையும் கலந்து அரைத்து, மீசை உள்ள இடத்தில் தடவி வந்தால்... மீசை காணாமல் போய்விடும்.

பச்சை மிளகாயை நறுக்கினால், நீண்ட நேரத்துக்கு கை எரிச்சலாக உள்ளதா? அதை நறுக்கும் முன், கைகளில் தேங்காய் எண்ணெய் அல்லது புளிக்கரைசலை சிறிதளவு தடவிக்கொண்டால்... எரிச்சல் ஏற்படாது.

கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன், சுவையும் அதிகரிக்கும்.

மெழுகுவத் தியை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால், அதிக நேரத்துக்கு எரியும்.

`ஏபிசி’ ஜூஸ் (ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்து செய்த ஜூஸ்) அடிக்கடி பருகி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளின் தாக்கம் மட்டுப்படும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை குறையும்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது, கலவையில் ராகிமால்ட் 2 டீஸ்பூன் சேர்த்தால், கமகமவென்றும், சூப்பர் சுவையிலும் இருக்கும்.

கீரைக்கூட்டுக்கு தேங்காயை அரைத்து விடுவதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால், மேலும் பிரமாதமான ருசியில் இருக்கும்.

பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அரைத்து அடை  வார்த்தால், மேலும் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.