Author Topic: ~ ஆட்டு இரத்த பொரியல் ~  (Read 389 times)

Offline MysteRy

~ ஆட்டு இரத்த பொரியல் ~
« on: January 28, 2016, 09:06:00 PM »
ஆட்டு இரத்த பொரியல்



தேவையான பொருட்கள்:

ஆட்டு ரத்தம் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -250 கிராம்
பட்ட மிளகாய் – 5
உப்பு -தேவைக்கு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.முதலில் ஒரு பாத்திரத்தில் ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும்.
2.பிறகு அதில் வெங்காயம்,பட்ட மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
3.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த ரத்தத்தை சேர்த்து விடாமல் கிளறவும்.
4.வெங்காயம் நன்கு வெந்து, ரத்தம் உறைந்ததும் கீழே இறக்கிவிட்டு பின் பரிமாறலாம்