Author Topic: ~ கூட்டுக் குருமா ~  (Read 374 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கூட்டுக் குருமா ~
« on: January 26, 2016, 09:22:28 PM »
கூட்டுக் குருமா



தேவையானவை:

1. நறுக்கிய கேரட், பீன்ஸ், நூக்கல், வெங்காயம், தக்காளி – தலா 100 கிராம்
2. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,
3. சோம்பு, பட்டைப் பொடி – தலா சிறிதளவு,
4. மிளகாய்த் தூள், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 4 மேசைக்கரண்டி.

அரைக்க:

1. தேங்காய் – 1 (துருவியது),
2. முந்திரி – 10 கிராம்,
3. சோம்பு – 5 கிராம்.

தாளிக்க:

1. ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா இரண்டு,
2. கிராம்பு – ஐந்து,
3. பட்டை, சாதிபத்திரி – சிறிதளவு.

செய்முறை:

1. எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
2. சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.