Author Topic: ~ பாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்) ~  (Read 292 times)

Offline MysteRy

பாகற்காய் குழம்பு (ஆந்திரா ஸ்டைல்)



தேவையானவை:

1. பாகற்காய் – 5
2. வெங்காயம் – 2
3. தக்காளி சாறு – 1/4 கப்
4. வரமிளகாய் – 4
5. மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
6. சீரகம் – 1 டீஸ்பூன்
7. எள் – 1 டீஸ்பூன்
8. எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
9. இஞ்சி, பேஸ்ட் பேஸ்ட் – 4 டீஸ்பூன்
10. நாட்டுச்சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
11. புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
12. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

1. பாகற்காயை நீரில் நன்றாக கழுவி, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து கிளறி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், வரமிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து மிதமான தீயில், பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காயை போட்டு ஐந்து நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நான்கு நிமிடம் வதக்க வேண்டும்.
3. பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். கடைசியாக அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச்சர்க்கரை, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான, மணமான பாகற்காய் குழம்பு ரெடி!