Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா? ~ (Read 341 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227538
Total likes: 29064
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா? ~
«
on:
January 25, 2016, 08:31:40 PM »
மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?
மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ – இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது.
மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது.
காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை.
ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.
”மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும்.
அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது.
மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:
மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்
தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது.
தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா? ~