Author Topic: ~ வெந்தய மாங்காய் ~  (Read 381 times)

Offline MysteRy

~ வெந்தய மாங்காய் ~
« on: January 23, 2016, 10:12:46 PM »
வெந்தய மாங்காய்



தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய் – 2
வெந்தயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 16
கடுகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 மி.லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மாங்காய்களை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு வெயிலில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உலரவிடவும். மாங்காய் ஓரளவு காய்ந்து விடும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் மற்றும் மிளகாயை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியதும் அரைத்து கொள்ளவும். இந்த பொடியை காய வைத்த மாங்காயுடன் கலந்து நன்கு குலுக்கி விடவும்.
மீதமுள்ள நல்லெண்ணையை நன்கு சுட வைத்து அதில் கடுகை தாளித்து அதனுடன் மஞ்சள் பொடியை கலந்து, உடனே எடுத்து மாங்காயுடன் கலந்து கிளறினால் சுவையான வெந்தய மாங்காய் ரெடி.