Author Topic: ~ ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா ~  (Read 330 times)

Offline MysteRy

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா



தேவையான பொருட்கள்:

காய்கறிகள் – 1 1/4 கப்
(நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/2 கப்
முந்திரி – 4
கசகசா – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கிராம்பு – 2
பட்டை – 1/2 இன்ச்
ஏலக்காய் – 1
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு, உப்பு சேர்த்து பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால், ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ரெடி!!!